Friday, November 13, 2015

தூறலில் முதல் துளி ...


 
கவிதைகளில் காதலுற்று
தேன்தமிலோடு புனைந்து
காகிதம் எனும் பாயினிலே
பேனா மை எனும் மதநீர் கொடுத்து
இதய கூட்டில் கர்ப்பமான
இதமான சிசுவே
தொடாமல் சென்ற தூறல்

விரக்தியின் விளிம்பில்
நின்ற என்னை
தொடாது போன அதிஸ்டமும்
பின் வலி காட்டி
வழி காட்டி
விழி கொண்டு
வழிய வழிய
ஒளி காட்டி
சென்ற அதிஸ்டமும் 
சங்கமிக்கும் ஒரு மையமே
தொடாமல் சென்ற தூறல்

தேகம் குளிர்கிறது
மேகம் கறுக்கிறது
தென்றல் வருடுகிறது
மின்னல் ஒளிகிறது
இடி ஒலிக்கிறது
காரிருள் மேகம் உடைத்து
ஒற்றை துளி விழுகிறது
குடை கொண்டு வாருங்கள்
என்னை தொடாது சென்ற தூறல்
உங்களை தொட்டு விடும்

நம்பிக்கையுடன்
- தமிழரிமா

No comments:

Post a Comment