Friday, November 13, 2015

பெண்



பிரமனனின் ஆச்சர்ய குறி
இறைவனே வரமாக வந்த 
அற்புத சாயல் நீ!

சுழலும் புவியும் - பெண் 
பொழியும் கவியும் - பெண் 
ஓடும் நதியும் - பெண் 
பெளர்ணமி மதியும் - பெண் 
அழகும் - பெண் 
அறிவும் - பெண் 

பெண் தேவை - நீ கருவாக 
பெண் தேவை - நீ உருவாக 
பெண் தேவை - நீ மடிசாய 
பெண் தேவை - நீ குடி வாழ 
பெண் தேவை - நீ மனுவாக 
பெண் தேவை - உன் அணுவாக 



கருவின் மூலம் இவர்தான் 
தந்தை என்காடியவள் - தாய் 
உன் கருவை தானெடுத்து 
உருவாக்கியவள் - தாரம்
காமத்தை தாண்டிய 
முத்தம் காடியவள் - மகள்
உலகை வெல்லும் திறமையுண்டு 
எனக்கே உணர்த்தினாய் - காதலி
ஒவ்வொரு குடியுளும் 
மகிழ்சி உண்டு - சகோதரி 
ஒவ்வொரு ஆணுக்கும் 
வெற்றி உண்டு - தோழி 

தாய் தாரம் 
மகள் மருமகள் 
அக்கை தங்கை 
தோழி காதலி 
வெற்றிகளை நாம் ருசிக்க 
பசி ஆறும் பெண் இனமே !

உனை மதியா ஆணுண்டு எனில் 
அது மனிதத்தின் மரணம் 
அவ்வினமும் மாறனும் 
பெண்ணை 
பொன்னாய் ,
கண்ணாய் ,
மண்ணாய் 
போற்றனும் 



பொறுமையில் பூமிதான் பெண் - 
பூகம்பம் காணாத வரை 
வளைவு கொண்ட நதிதான் பெண் -
சுழியில் சிக்காத வரை 
அழகு நிறை மதிதான் பெண்- 
அமாவாசை காணாத வரை 
பொழிகின்ற கவியும் பெண் -
இலக்கியம் பிழைக்காத வரை 

தன்னை காட்சி பொருளாக்காத
பெண் - பெண் இனத்தின் மேன்மை 
பெண்ணை கவர்ச்சி பொருளாக்காத
ஆண் - ஆண் இனத்தின் தாய்மை 


No comments:

Post a Comment